செய்திகள்
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
கோவை அருகே வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை புதூர் அருகே உள்ள பச்சாப்பள்ளியை சேர்ந்தவர் லியோ (40). துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்கள் விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து லியோவின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வந்த பின்னர் தான் வீட்டில் இருந்த நகை, பணம் எவ்வளவு கொள்ளை போய் இருக்கிறது என்பது தெரிய வரும்.