செய்திகள்

மொரப்பூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து பணம் கொள்ளை

Published On 2019-05-18 12:46 GMT   |   Update On 2019-05-18 12:46 GMT
மொரப்பூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்துள்ள சிந்தல்பாடி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சத்தியதேவன். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். 

நேற்றிரவு வியாபாரத்தை முடித்து சத்தியதேவன் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்து போது கொள்ளை நடந்தது தெரியவந்தது. அதில் கடையில் இருந்த 15 பேன், 2 வாட்டர் ஹீட்டர் மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து மொரப்பூர் போலீசில் சத்தியதேவன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையின் பின் பகுதி வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடித்து உள்ளனர். அந்த கடை இரும்பு தகரத்தினால் அமைக்கப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் திருடுவதற்கு பயனுள்ளதாக அமைந்திருப்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் திருடிய போது அவரின் ரத்தம் இரும்பு தகட்டித்தில் படிந்துள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News