செய்திகள்

எரிவாயு குழாய் பதிக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Published On 2019-05-15 10:33 GMT   |   Update On 2019-05-15 10:33 GMT
ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை:

நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடியில் உள்ள இரு தனியார் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டதுக்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவிலான விவசாயநிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. விளைநிலங்களுக்கு இழப்பீடாக அளிக்கப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்ட நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.



இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News