செய்திகள்

பிரிட்ஜில் வைத்திருந்த பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பலி

Published On 2019-05-09 16:30 IST   |   Update On 2019-05-09 16:30:00 IST
வந்தவாசி அருகே பிரிட்ஜில் வைத்திருந்த பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (வயது 30. இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டு ஆகிறது. ராகுல் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பகல் உமா பிரியாணி செய்து சாப்பிட்டார். மீதமான பிரியாணியை பிரிட்ஜில் வைத்து அன்று இரவு சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார்.

திருமணமாகி 4 ஆண்டே ஆவதால் உமா மரணம் குறித்து செய்யாறு சப்-கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

பிரியாணி சாப்பிட்டதால் தான் உமா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News