செய்திகள்

97.93 சதவீதம் தேர்ச்சி: பிளஸ்-1 தேர்வில் திருப்பூர் 2ம் இடம்

Published On 2019-05-08 09:38 GMT   |   Update On 2019-05-08 09:38 GMT
பிளஸ்-1 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
திருப்பூர்:

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 984 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 23 ஆயிரத்து 487 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டு 96.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 1.53 சதவீதம் கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் 95.61, மாநகராட்சி பள்ளியில் 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருப்பூர் கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு வெளியான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News