செய்திகள்

நீலகிரியில் கொட்டித்தீர்த்த கோடை மழை - சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-04-30 14:53 GMT   |   Update On 2019-04-30 14:53 GMT
நீலகிரியில் திடீரென கொட்டித்தீர்த்த மழையால் அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு பின்னர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த திடீர் மழை அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்தது. மலைக்காய்கறிகளுக்கு ஏற்றதாக இந்த மழை உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.

இது தவிர அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மலர்ச்செடிகளுக்கு இந்த மழை மிக அவசியம் என்று பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். கனமழையால் ஊட்டி படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவிய வெப்பம் தணிந்தது.

சமவெளிப்பகுதியில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
Tags:    

Similar News