செய்திகள்

மதுரையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி - 5 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2019-04-27 17:13 GMT   |   Update On 2019-04-27 17:13 GMT
வேலை வாங்கித்தருவ தாக ரூ.4 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை:

மதுரை ஆனையூர் ஆபீசர் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவரிடம் திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த பாலாஜி (33), அவரது மனைவி யாகினி, துரை (65), அவரது மனைவி லட்சுமி (60), விராட்டிப்பத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (40) ஆகிய 5 பேரும் ராஜேந்திரனின் மகனுக்கு வருமானவரித்துறையிலும், மருமகளுக்கு வங்கியிலும் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5,75,000 பெற்றுள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் ராஜேந்திரன் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டார். அவர்கள் 5 பேரும் 2 தவணைகளில் ரூ.1,65,000 திருப்பிக் கொடுத்து விட்டு மீதித்தொகை ரூ.4 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து ராஜேந்திரன் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, சம்பந்தப்பட்ட பாலாஜி, யாகினி, துரை, லெட்சுமி, நாகேந்திரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News