செய்திகள்

நாகை அருகே பெண் எரித்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-04-25 16:58 GMT   |   Update On 2019-04-25 16:58 GMT
நாகை அருகே 40 வயது மதிக்கதக்க பெண் உடல் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர், உழவர் தெரு அருகில் கருவேலமரகாட்டு பகுதியில் நேற்று மாலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி மூலம், நாகை நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது முட்புதரில் 40 வயது மதிக்கதக்க பெண் உடல் எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர். 

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பெண்ணை எரித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News