செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘களை’ கட்டும் மாம்பழம் விற்பனை

Published On 2019-04-23 10:19 GMT   |   Update On 2019-04-23 10:19 GMT
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான மாம்பழம் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. அதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம்:

மாம்பழங்கள் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கொடைக்கானல், நத்தம், திருச்சி, பகுதிகளிலிருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தினமும் 10 டன் வரை விற்பனைக்கு வருகிறது.

வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்க பல நாட் கள் ஆகும் என்பதால், காய் பருவத்திலே பறித்து வியாபாரிகள் ரகசியமான இடத்தில் பதுக்கி வைத்து கார்பைட் கற்களை பயன்படுத்தி ஒரே நாளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கின்றனர்.

இந்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சாலையோர வியாபாரிகளும் தலைச்சுமை வியாபாரிகளும் மாம்பழத்தின் நிலை தெரியாமல் மொத்த வியாபாரிகளிடம் மாம்பழங்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். எனவே கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைப்பவர்கள், அதனை விற்பனை செய்பவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News