செய்திகள்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்காத 3.85 லட்சம் பேர்

Published On 2019-04-20 15:46 IST   |   Update On 2019-04-20 15:46:00 IST
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை.
திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 15,40, 495 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை. பழனி சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்து உள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 3-ம் பாலினத்தவர் 158 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிகபட்டசமாக 79.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 75.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 77.36 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இது கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதம் ஆகும்.

Tags:    

Similar News