செய்திகள்

பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி பெண் பலி

Published On 2019-04-20 15:22 IST   |   Update On 2019-04-20 15:22:00 IST
பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:

பழைய வண்ணாரப் பேட்டை கழிவுநீர் ஏற்றும் நிலையம் கல்லறை சாலையில் உள்ளது. நேற்று மதியம் இதன் அருகே ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் நோக்கி வந்த ஒரு குடிநீர் லாரி அவர்மீது மோதியது. இதில் அந்த பெண், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

அவர் யார் என்று தெரியவில்லை. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மஞ்சள் நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். அவர் வைத்திருந்த பையில் காய்கறிகளும், துணிகளும் இருந்தன.

லாரியை ஓட்டிய கிளீனர் அஜித்குமார் (20) கைது செய்யப்பட்டார். காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News