செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டில் 30 பவுன் கொள்ளை

Published On 2019-04-11 17:08 IST   |   Update On 2019-04-11 17:08:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் வீரராஜ்(வயது45). இவர் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று வீரராஜ் பணிக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சங்கீதா வீட்டின் முன்புறம் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் வரை கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் டி.எஸ்.பி. ராஜா இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் வந்து கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வீடுகள் அதிகமாகவும் நெருக்கமாகவும் உள்ள இடம். அந்த இடத்தில் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News