செய்திகள்

பெரியகுளத்தில் வரதட்சணைக்காக மனைவியை பட்டினி போட்ட கணவர்

Published On 2019-03-27 17:35 GMT   |   Update On 2019-03-27 17:35 GMT
வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்ட கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி:

பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பருக்கும் கடந்த 3.2.2017 தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு பிரீத்தியை கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

தனியாக வீடு பார்க்க வேண்டும் என சொல்லி பிரீத்தியின் 18 பவுன் நகைகளை அடகு வைத்து விட்டனர். வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் பிரீத்திக்கு சரிவர சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளனர்.

குழந்தை பிறப்பிற்காக பிரீத்தி தனது தாய் வீட்டிற்கு வந்தார். அவரை பார்க்க வநத கார்த்தியின் உறவினர்கள் 5 பவுன் நகை குழந்தைக்கு அணிவித்து வீட்டிற்கு வர வேண்டும் என பேசி உள்ளனர். இதனால் பிரீத்தி கோர்ட்டில் வரதட்சணை புகார் குறித்து மனு அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கார்த்திக், மாமியார் பிரேமா, உறவினர்கள் ரேணுகா, சுப்பிரமணியம், பானுபிரியா, பெத்துராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News