செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2019-03-18 11:49 GMT   |   Update On 2019-03-18 11:49 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் 2,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
கோவை:

தமிழகம் மற்றும் புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (19-ந்தேதி) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 2, 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு நடைபெறும் என்று வக்கீல்கள் கூறினர். #PollachiCase

Tags:    

Similar News