செய்திகள்

கவர்னர் கிரண்பேடி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார்- நாராயணசாமி புகார்

Published On 2019-03-14 10:54 GMT   |   Update On 2019-03-14 10:54 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் கூறியுள்ளார். #Narayanasamy #kiranbedi

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் டுவிட்டர் வலைதளத்தில் சமூக கருத்துகளை பதிவிடுவது வாடிக்கை. இதேபோல கவர்னர் கிரண்பேடி டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயக கடமையில் ஓட்டளிப்பது முக்கியமான ஒன்று. இது நாட்டின் குடிமகன்கள் அனைவரின் கடமை. ஒவ்வொரு இந்தியனும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் இந்த கடமையை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பிரதமர் மோடிக்கும் ஹேஷ்டாக் செய்திருந்தார். கிரண்பேடியின் பதிவை குறிப்பிட்டு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், மக்களின் குரலை வெளிப்படுத்துவதுதான் ஓட்டு. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை முக்கிய பிரமுகர்கள் விரிவுபடுத்த வேண்டும். உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமியும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், கிரண்பேடி பிரதமர் யார்? பா.ஜனதா பிரதமர் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். டுவிட்டர் பதிவுகளை வெளியிடும்போது கவனம் வேண்டும். ஒரு அரசு பதவியில் இருந்துகொண்டு அரசியல் செய்யக்கூடாது. உங்களின் தலைவர் பிரதமர். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் அல்ல. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகாதா? என குறிப்பிட்டுள்ளார். #Narayanasamy #kiranbedi

Tags:    

Similar News