செய்திகள்

சேலத்தில் வெயில் கொடுமை- எலுமிச்சம்பழம் விலை கடும் உயர்வு

Published On 2019-03-13 12:32 GMT   |   Update On 2019-03-13 12:32 GMT
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சேலம்:

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் கொடுமையால் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதேபோல் எலுமிச்சம் பழத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

எலுமிச்சம் பழம் ஜூஸ்-க்கு பயன்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. கடந்த வாரம் 3 ரூபாய்க்கு விற்ற ஒரு எலுமிச்சம்பழம்,  7 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்ற பழம் 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News