செய்திகள்

டிஜிபி ராஜேந்திரன் உள்பட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை

Published On 2019-03-13 14:39 IST   |   Update On 2019-03-13 14:39:00 IST
பாராளுமன்ற தேர்தலை யொட்டி போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. #ParliamentElection #DMK
சென்னை:

தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுப்பது வழக்கம். அந்த வகையில் தி.மு.க. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து வருகிறது.

அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் வருமாறு:-

1. டி.கே.ராஜேந்திரன் (போலீஸ் டி.ஜி.பி.)

2. சத்தியமூர்த்தி (உளவுப்பிரிவு ஐ.ஜி.)

3. ஈஸ்வர மூர்த்தி (உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி)

4. கண்ணன் (உளவுப்பிரிவு சூப்பிரண்டு)

5. திருநாவுக்கரசு (உளவுப்பிரிவு துணை கமி‌ஷனர்)

6. விமலா (உளவுப்பிரிவு துணை கமி‌ஷனர்)

7. நாகராஜன் (ஐஜி. மத்திய மண்டலம்)

8. வரதராஜு (ஐ.ஜி. மேற்குமண்டலம்)

9. பெரியய்யா (ஐ.ஜி. மேற்குமண்டலம்)

10. ராஜேந்திரன் (கூடுதல் டி.எஸ்.பி. உளவுப்பிரிவு)

தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 10 போலீஸ் அதிகாரிகள் பட்டியலில் உளவுப்பிரிவு அதிகாரிகள் 5 பேர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் உள்ள போலீஸ் அதிகாரிகளில் பலரை தேர்தல் ஆணையம் விரைவில் மாற்றி உத்தரவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #DMK
Tags:    

Similar News