செய்திகள்

வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு - 3 வாலிபர்கள் கைது

Published On 2019-03-11 10:28 GMT   |   Update On 2019-03-11 10:28 GMT
போத்தனூர் அருகே வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்டு போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் போலீசார் ஈச்சனாரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வருவதை போலீசார் கண்டனர். அவர்கள் தாறுமாறாக ஓட்டி வந்ததால் மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆவேசமடைந்த வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரனை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தனர். உடனே அந்த வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது வாலிபர்கள், போலீசாரின் ரோந்து வாகனத்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொல கொம்பை பகுதியை சேர்ந்த ஹரிஷ்வரன்(வயது 28), விஜய்(23), ரஞ்சித்(21) என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News