செய்திகள்

நொய்யல் பகுதியில் தேங்காய் பருப்பு விலை உயர்வு

Published On 2019-02-22 14:11 GMT   |   Update On 2019-02-22 14:11 GMT
நொய்யல் பகுதியில் தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, குளத் துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னைந்தோப்புகளை வைத்துள்ளனர்.

இவர்கள் தேங்காய்கள் விளைந்ததும், அவற்றினை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை வெயிலில் போட்டு காய வைக்கின்றனர். பின்னர் அவற்றை சாலைப்புதூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று, ஏல அடிப்படையில் விற்பனை செய்கின்றனர். 

இதனை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.    

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்தவாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.10,400-க்கு  வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு  ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News