செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

Published On 2019-02-18 19:32 IST   |   Update On 2019-02-18 19:32:00 IST
அருப்புக்கோட்டை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர்.

11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் மொபட் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

மோதிய வேகத்தில் கணவனும்-மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரலிங்கத்தை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News