செய்திகள்

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் - காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-02-14 16:06 GMT   |   Update On 2019-02-14 16:06 GMT
மண்ணச்சநல்லூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர்:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தட்டியங்காமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. விழாவின் நிறைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

இதனை பார்ப்பதற்காக அதேபகுதி பூணாம்பாளையத்தை சேர்ந்த தனசேகர் (37), சிறுமி இந்துமதி (15) உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அப்போது ராசாம்பாளையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலில் தனசேகர் உள்ளிட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து வந்த அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனாலும் போலீசார் புகாரினை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் இன்றும் வழக்கு பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த பூணாம்பாளைத்தை சேர்ந்த பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், உயர் அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என கூறினர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று மண்ணச்சநல்லூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. #tamilnews
Tags:    

Similar News