செய்திகள்

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

Published On 2019-02-06 13:25 GMT   |   Update On 2019-02-06 13:25 GMT
ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலங்குடி:

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் அறிக்கை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் அண்மையில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் இருக்கும் ஏழை, எளிய, பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மா, பலா எலு மிச்சை,வாழை,போன்ற விவசாய பயிர்களுக்கு இன்னும் நிவாரண உதவித்தொகை கிடைக்க  விவசாயிகளுக்கு  உடனடியாக மாவட்ட நிர்வாகம்  இழப்பீடு வழங்க வேண்டும், ஆலங்குடி, கீரமங்கலம்  பேரூராட்சிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும்.

வருகிற 11, 12-ந்தேதிகளில் சேலத்தில் நடைபெறும் விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க வேண்டும், 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில மாநாட்டில் இளைஞர்கள் திரளாக பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

கூட்டத்தில் ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார், நல்லதம்பி, தமிழ்மாறன், முத்துக்கருப்பன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News