செய்திகள்

ஜவுளி வியாபாரி போல் நடித்து கைவரிசை- வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2019-01-31 14:45 GMT   |   Update On 2019-01-31 14:45 GMT
கோவையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.

கோவை:

கோவை சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் தடாகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ரசீது (34), அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது சமீர் (33) என்பதும் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் ஜவுளி வியாபாரி போலவும், செல்போன் விற்பனை செய்பவர்கள் போலவும் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சில செல்போன்களை எடுத்து கொண்டு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதும், அங்குள்ள வாலிபர்களிடம் குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கூறி அதனை வாங்கும் வாலிபர்களிடம் பணத்தை பெற்று கொண்டு செல்போனை மடித்து கொடுக்கும் போது செல்போன் மூடியை மட்டும் கொடுத்து நூதன முறையில் பணம் பறித்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News