செய்திகள்

அன்னூர் அருகே மரக்கட்டையால் தாக்கி வியாபாரி கொலை

Published On 2019-01-31 16:04 IST   |   Update On 2019-01-31 16:04:00 IST
கோவை மாவட்டம் அன்னூர் அருகே இன்று மரக்கட்டையால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் சிவசாமி (46). இவர் கடந்த 3 வருடமாக கணேசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள மெயின் ரோட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார்.

இன்று காலை சிவசாமி வாக்கிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த வட மாநில வாலிபர் திடீரென மரக்கட்டையால் சிவசாமி தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சிவசாமியை மீட்டு கோவில் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிவசாமி இறந்தார். சிவசாமியை கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் எதுவும் பேச மறுக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட சிவசாமிக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News