செய்திகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2019-01-24 11:22 GMT   |   Update On 2019-01-24 11:22 GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #GIM2019 #EdappadiPalanisamy
சென்னை:
 
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றன. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுமார் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டை விட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அடுத்த உலக மூதலீட்டாளர் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். #GIM2019 #EdappadiPalanisamy
Tags:    

Similar News