செய்திகள்
100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி.

கோவை ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கும் பிரமாண்ட தேசியக்கொடி

Published On 2019-01-24 10:28 GMT   |   Update On 2019-01-24 10:28 GMT
கோவை ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை:

இந்தியன் ரெயில்வே தென்னக ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரெயில் நிலையத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஏற்றுவதற்காக 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையில் பிரேத்யேகமாக பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.

இந்த பிரமாண்ட தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பிரமாண்டமாக கோவை ரெயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடியை ஏராளமான ரெயில் பயணிகள் கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேசியக்கொடி முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர்.



Tags:    

Similar News