செய்திகள்

ஆவடியில் ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை- அண்ணன் மகன் கைது

Published On 2019-01-21 15:21 IST   |   Update On 2019-01-21 15:21:00 IST
ஆவடியில் மின் மோட்டாரை கழற்றிய தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார்.

திருநின்றவூர்:

ஆவடி மந்தவமேட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த மின் மோட்டாரை பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் மகன் தேவராஜ் கழற்றி வேறு இடத்தில் பொருத்தினார்.

இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தேவராஜ் அருகில் கிடந்த கட்டையால் ஆறுமுகத்தை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆறுமுகம் வீட்டில் அறையில் தூங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரது மார்பில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News