செய்திகள்

கீழக்கரையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போலீஸ் கட்டிடம் - எஸ்.பி. தலைமையில் பூமி பூஜை நடந்தது

Published On 2019-01-19 14:09 GMT   |   Update On 2019-01-19 14:09 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை::

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள போலீஸ் ஸ்டே‌ஷன் 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓராண்டாக அருகே உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அறையில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.

இதையடுத்து புதிய கட்டிடம் கட்டக்கோரி பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய போலீஸ் ஸ்டே‌ஷன் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதற்கான பூமி பூஜையை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

கீழக்கரையை சேர்ந்த மக்கள் நலபாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம், மக்கள் டீம் அமைப்பு நிறுவனர் காதர் ஆகியோர் கூறுகையில், சேதமடைந்த கட்டிடத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது.

இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்க உள்ளது. நடவடிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார். #tamilnews
Tags:    

Similar News