செய்திகள்
கோப்புப்படம்

வானூர்தி, பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Published On 2019-01-18 08:58 GMT   |   Update On 2019-01-18 08:58 GMT
சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #TNCabinet #AerospaceDefencePolicy
சென்னை:

தமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது அனுமதி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகளை தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்துவதற்கு, கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TNCabinet #AerospaceDefencePolicy
Tags:    

Similar News