செய்திகள்

வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவன்- மனைவி- குழந்தை காயம்

Published On 2019-01-14 17:24 IST   |   Update On 2019-01-14 17:24:00 IST
வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் கணவன் தனது மனைவி குழந்தையுடன் படுகாயம் அடைந்தார். அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் விவசாயி காமராசு (வயது40). இவரது மனைவி தேவி (30).இவர்களுடைய மகன் பாலமுருகன் (3).

இந்த நிலையில் காமராசு நேற்று தனது மனைவி மகனுடன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

அவர் நாஞ்சிக்கோட்டையை அடுத்துள்ள பைபாஸ் சாலை அருகே செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது மதுபோதையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் காமராசுவின் மோட்டார் சைக்கிள் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காமராசு, தேவி மற்றும் குழந்தை பாலமுருகன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து அந்த வழியாக பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகள் , சாலையில் காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டனர். பிறகு அவர்கள் 3 பேருக்கும் முதலுதவி அளித்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News