செய்திகள்

சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணாரெட்டி அப்பீல்

Published On 2019-01-08 07:15 GMT   |   Update On 2019-01-08 07:22 GMT
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணாரெட்டி அப்பீல் செய்கிறார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy

ஓசூர்:

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் தனிகோர்ட்டு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவரது சார்பில் வக்கீல் டி.செல்வம் ஆஜராகி இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார். இந்த தண்டனையை எதிர்த்து எப்போது அப்பீல் செய்வீர்கள் என்று பாலகிருஷ்ணா ரெட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

 


என் மீது தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்த வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்தேன். இன்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக டெல்லியில் இருந்து முக்கிய வக்கீல் ஒருவரை அழைத்து வர நேற்று இரவு பேச்சுவார்த்தை நடந்தது.

இன்று டெல்லியில் இருந்து வக்கீல் வந்ததும் அப்பீல் மனு தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy

Tags:    

Similar News