செய்திகள்

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த டிரைவர் கைது

Published On 2019-01-07 12:16 GMT   |   Update On 2019-01-07 12:16 GMT
திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் இடுவம்பாளையம் தந்தை பெரியார் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக வீரபாண்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர், அப்போது அங்கு பனியன் தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்தனர் அவரிடமிருந்து 25 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அவர் மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 39) என்பதும், தற்போது திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ டிரைவராக வேலை செய்வதும் கஞ்சாவை மதுரையில் இருந்து கொண்டு வந்து திருப்பூரில் விற்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News