செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர் கல்வித்துறை செயலரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-01-07 10:07 GMT   |   Update On 2019-01-07 10:56 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CourtDefamationCase #HighCourt #DepartmentofHigherEducation
சென்னை:

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை

இதையடுத்து, வழக்கை விசாரித்த ஐகோர்ட், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளது. #CourtDefamationCase #HighCourt #DepartmentofHigherEducation
Tags:    

Similar News