செய்திகள்

122 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2019-01-03 11:45 GMT   |   Update On 2019-01-03 11:45 GMT
கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக குறைந்துள்ளது. #MullaperiyarDam
கூடலூர்:

தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.

தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.

900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
Tags:    

Similar News