செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

Published On 2018-12-30 15:01 GMT   |   Update On 2018-12-30 15:01 GMT
கோவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #pmk #mekedatudam #ramadoss

கோவை:

கோவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

வன்னியர் சங்க தலைவர் குரு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். காவிரி ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு நிவாரண நிதி வழங்க வேண்டும். விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டதை திரும்ப பெற வேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் 3-வது சுரங்கம் அமைக்க கூடாது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் புத்தாண்டில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொங்கு மண்டலத்தில் நலிவடைந்த தொழில்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டியில் செயல்பட்டு வரும் உருளை கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக் கூடாது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக அறிவிக்க வேண்டும்.

சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அத்திக்கடவு-அவினாசி உள்ளிட்ட பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


பொதுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #pmk  #mekedatudam #ramadoss

Tags:    

Similar News