செய்திகள்

ஆலப்பாக்கத்தில் வாலிபரை கத்தியால் குத்தி செயின் பறிப்பு

Published On 2018-12-24 12:09 IST   |   Update On 2018-12-24 12:09:00 IST
ஆலப்பாக்கத்தில் வாலிபரை கத்தியால் குத்தி செயின் பறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

அரியலூர் மாவட்டம் செம்பியகுடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது நண்பரான சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் இன்று துபாய் செல்ல உள்ளார். அவரை வழியனுப்புவதற்காக நேற்று இரவு ஜெகதீஸ்வரன் சென்னை வந்தார்.

இரவு 11 மணி அளவில் அவர் ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் ஜெகதீஸ்வரனை கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.

Tags:    

Similar News