செய்திகள்

நெல்லை ரெயில் நிலையத்தில் ரே‌ஷன் அரிசி கடத்தல்- 6 பெண்கள் கைது

Published On 2018-12-23 14:53 GMT   |   Update On 2018-12-23 14:53 GMT
நெல்லை ரெயில் நிலையத்தில் பழப்பெட்டிகள் போல ரே‌ஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு இன்று அதிகாலை ஒரு எக்ஸ் பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் 6 பெண்கள் பழப்பெட்டிகளை ஏற்றி திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு பழங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சந்தேகம் அடைந்து பெட்டியை சோதனை செய்தார்.

அப்போது மேலே மட்டும் பழங்களை அடுக்கி வைத்து விட்டு, உள்ளே ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அங்கு இருந்த அனைத்து பழப் பெட்டிகளிலும் மொத்தம் 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

1.பழனியம்மாள் (47), 2.பூலம்மாள் (35), 3.உலகம்மாள் (35), 4.சுப்பு (50), 5.லட்சுமி (50), 6.கருப்பாயி (58). இவர்கள் அனைவரும் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லை குடிமை பொருள் பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News