செய்திகள்

பி.எட் பட்டதாரி வாலிபர் தூக்கில் தொங்கினார் - மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்

Published On 2018-12-20 17:26 IST   |   Update On 2018-12-20 17:26:00 IST
ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரி வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் செய்துள்ளார்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சவுந்திரபாண்டி (வயது 29). ஆசிரியர் பயிற்சி படிப்பு (பி.எட்.) முடித்துள்ளார்.

வேலை தேடி வந்த சவுந்தரபாண்டி, அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது சவுந்திர பாண்டியின் சட்டைப்பையில் இருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அதில், தனது சாவுக்கு ஞானமணி மற்றும் இளையராஜா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ஞானமணி (35)க்கும், சவுந்தர பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இளையராஜா என்பவருடன் ஞானமணி தொடர்பில் இருந்தாராம். இந்த விவகாரத்தில் தான் சவுந்தரபாண்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதன் பேரில் ஞானமணி மற்றும் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சவுந்தரபாண்டி சாவில் மர்மம் நிலவுவதாக அவரது தந்தை சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என கள்ளிக்குடி போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News