செய்திகள்

ஊசூர் அருகே இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

Published On 2018-12-20 16:37 IST   |   Update On 2018-12-20 16:37:00 IST
ஊசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் அடுத்த ஊசூர் புலிமேடு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னபையன் மகள் சுகன்யா (24). இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

ரத்த வெள்ளத்தில் சுகன்யா இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அக்கம் பக்கத்தினர் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுகன்யா குடும்பத்தினருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இதில் சுகன்யா கொலை செய்யபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக வாலிபர் ஒருரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News