செய்திகள்

அசோக்நகரில் கிளப்பில் சூதாட்டம் - 24 பேர் கைது

Published On 2018-12-18 12:09 IST   |   Update On 2018-12-18 12:09:00 IST
அசோக்நகரில் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதி மற்றும் கிளப்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அசோக் நகர் 4-வது அவின்யூவில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலாஜி, ரவிக்குமார், தீனதயாளன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News