செய்திகள்

பல்லடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது

Published On 2018-12-16 17:58 IST   |   Update On 2018-12-16 23:13:00 IST
பல்லடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பல்லடம்:

பல்லடம் கரைப்புதூர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான இடுவாய் பாரதி நகரை சேர்ந்த தர்மன் (52) கடத்திச்சென்றார்.

மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தர்மன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கேட்டபோது சிறுமி தர்மனிடம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

விசாரணையில் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தலைமறைவான தர்மனை தேடியபோது அவர் சின்னகாளிபாளையம் குட்டை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் தர்மனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News