செய்திகள்

தஞ்சையில் பஸ் பயணிகளிடம் பணம்-நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

Published On 2018-12-15 10:28 GMT   |   Update On 2018-12-15 10:28 GMT
தஞ்சையில் பஸ் பயணிகளிடம் பணத்தை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பணம், நகை, மணிபர்சை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சேர்மானநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 40). இவர் நேற்று மதியம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ் வண்டிக்காரத்தெரு பாலத்தில் வந்தபோது அந்த பஸ்சில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த சித்ரா (32). என்பவர் கோமதி வைத்திருந்த மணிபர்சை நைசாக திருடிக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி கூச்சல் போடவே டிரைவர் விஜய் பஸ்சை நிறுத்தி விட்டார். மற்ற பயணிகள் சித்ராவை பிடிக்க முயன்றபோது அவர் பயணிகளை தள்ளிவிட்டு கீழே இறங்கி ஓடிச்சென்று அந்த வழியாக சென்ற மற்றொரு பஸ்சை நிறுத்தி அதில் ஏறி சென்றார். அதனை பார்த்த டிரைவர் விஜய் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்த சித்ராவை பிடித்தனர்.

இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் சித்ராவை ஒப்படைத்தனர். போலீசார் சித்ராவிடம் விசாரணை செய்தபோது அவர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை, பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சித்ராவை கைது அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் மணிபர்சை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News