செய்திகள்

பெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம் - மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார் மரியாதை

Published On 2018-12-13 04:13 GMT   |   Update On 2018-12-13 04:13 GMT
மறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார், மக்கள் மரியாதை செலுத்தினர். #Periyapandiyan
சென்னை:

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படித்து, சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையும் கனவும் அவருடன் இரண்டற கலந்திருந்தது. அந்த கனவு நனவானதால் அவர் காவல் துறை பணியை கண்ணாக மதித்து செய்து வந்தார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குற்றவாளிகளிடம் மட்டும் கோபக்கனலாக மாறி விடுவார். அந்த சமயத்தில் பயம் என்பதே அவரிடம் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது அந்த இயல்பே அவருக்கு “எமன்” ஆகிப் போனது.



சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை அங்கு பிடிக்கச் சென்றபோது பெரிய பாண்டியன் கொள்ளையருடனான மோதலில் சக ஆய்வாளர் சுட்டதில் மரணமடைந்தார்.

இன்று அவரது ஓராண்டு நினைவு தினத்தையொட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார், மக்கள் மரியாதை செலுத்தினர். #Periyapandiyan
Tags:    

Similar News