செய்திகள்

மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைப்பு

Published On 2018-12-02 14:11 GMT   |   Update On 2018-12-02 14:11 GMT
மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News