செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள்

Published On 2018-11-27 18:27 GMT   |   Update On 2018-11-27 18:27 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் முதல் முறையாக ஸ்மார்ட் போனில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வினை நடத்தியது.

இந்த தேர்வை, 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 33 பேர் ஸ்மார்ட் போன், மடிக்கணினியை ஆகியவற்றை பயன்படுத்தி எழுதினர். தேர்வினை பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலா தொடங்கி வைத்தார். தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர் ராமச்சந்திரன் செயல்பட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், பள்ளி ஒருங்கிணைப்பாளருமான குழந்தைவேல் செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டத்திலே முதல் முறையாக அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News