செய்திகள்

குட்கா வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி திடீர் மாற்றம்- புதிய அதிகாரி நியமனம்

Published On 2018-11-26 01:36 GMT   |   Update On 2018-11-26 01:36 GMT
குட்கா வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக இன்னொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #gutkhacase #cbiofficer
சென்னை:

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேர் மீதும் சமீபத்தில் சி.பி.ஐ. போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர் குற்ற பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் திடீரென்று மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக இன்னொரு போலீஸ் சூப்பிரண்டு பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வழக்கில் இடம்பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரமோத்குமார் என்பவரும் மாற்றப்பட்டு உள்ளார்.

ஆனால் இதுபற்றி விசாரித்தபோது பிரமோத்குமார் சி.பி.ஐ.யில் பணியாற்றும் கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் மாற்றப்பட்டார் என்றும் சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #gutkhacase #cbiofficer 
Tags:    

Similar News