செய்திகள்

காங்கயத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2018-11-24 10:25 GMT   |   Update On 2018-11-24 10:26 GMT
காங்கயத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் அருகே திருப்பூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த மாதம் 23-ந்தேதி அவரது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த4 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர். இந்நிலையில் நேற்று (23-ந்தேதி) அதிகாலை நடைபயிற்சி வந்த விஜயகுமார் என்பவரிடம் இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.1500-ஐ பறித்து தப்பினர்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று அங்குள்ள நால்ரோட்டில் பஸ் நிறுத்ததில் 2 பேர் நின்றனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உஷாரான காங்கயம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்ற பல்லன் (வயது 27), சேலம் வாழப்பாடியை சேர்ந்த மற்றொரு கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பூங்கொடியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரிடம் பறித்த பணத்தையும் கைப்பற்றினர்.

விசாரணையில் பல்லன் (எ) கார்த்திக் மீது ஏற்கனவே 18 திருட்டு வழக்குகள் 3 வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் மீது 3 முறை குன்டாஸ் போடப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு கார்த்திக் மீதும் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி ராஜமகேஷ் உத்தரவுப்படி 2 கொள்ளையர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News