செய்திகள்

சாயல்குடி அருகே மணல் கடத்தல்- டிராக்டர்கள் பறிமுதல்

Published On 2018-11-23 13:07 GMT   |   Update On 2018-11-23 13:07 GMT
சாயல்குடி அருகே அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளியவர்கள் தப்பிய சென்றதால் டிராக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சாயல்குடி:

கடலாடி மலட்டாறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக புகார் வந்தது.

அதன்பேரில் கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், கடலாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கடலாடி ஆப்பனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

கடலாடி-ஆப்பனூர் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது கண்ணன் பொதுவன் விலக்கு ரோடு அருகே என்.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் புரசங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத டிராக்டர்களில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவது தெரியவந்தது. டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் அதனை நிறுத்தி விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

இரு டிராக்டர்களும் கைப்பற்றபட்டு கடலாடி போலீஸ் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News