செய்திகள்

8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவர்- போலீஸ் விசாரணைக்கு பயந்து வி‌ஷம் குடித்தார்

Published On 2018-11-21 15:38 IST   |   Update On 2018-11-21 15:38:00 IST
திருப்பூரில் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர், மாணவியை தொடர்ந்து வந்துள்ளார்.

திடீரென மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த மாணவர் தொடர்ந்து மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவனை அழைத்து எச்சரித்து உள்ளனர்.

இன்று விசாரணைக்கு வரும்படி மாணவரிடம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மாணவர் அவமானத்தில் சாணிப்பவுடரை குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Tags:    

Similar News