செய்திகள்

மயிலாப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2018-11-15 16:35 IST   |   Update On 2018-11-15 16:35:00 IST
மயிலாப்பூரில் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். #schoolstudentmolestation

சென்னை:

மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. அதே பகுதியை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரவி நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் மாணவியை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் பயந்து போன மாணவி கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரவியின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது ரவி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர் ரவியை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #schoolstudentmolestation

Tags:    

Similar News